கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ நிறையுடைய திமிங்கல வாந்தியுடன் இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மீனவர்கள் இன்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1267.png)
கைதான மீனவர்கள் கந்தகுளி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் .
கடலில் மிதந்த திமிங்கல வாந்தியை மீனவர்கள் இரகசியமான முறையில் எடுத்துச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் மீனவர்களிடமிருந்த திமிங்கல வாந்தியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .