இந்தியாவை சேர்ந்த மாணவி ஒருவர் சமீபத்தில் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து பெருமையை சேர்த்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன் (வயது 16) என்ற மாணவியே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளம் வயது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச எவரெஸ்ட் தினத்தை முன்னிட்டு காத்மாண்டுவில் நேற்றையதினம் (29) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நேபாள பிரதமர் பிரசந்தா (Pushpa Kamal Dahal) , எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த காம்யா கார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.