காலி, ஹிக்கடுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரானகம பகுதியில் ரயில் பாதையில் கவனக்குறைவாகப் பயணித்த பெண் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (29) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி, தொடந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
மாத்தறையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.