ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தைத் தொடர்ந்து, தலைநகர் மட்ரிட்டையும் தெற்கு அண்டலூசியா பிராந்தியத்தையும் இணைக்கும் அதிவேக ரயில் பாதையின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஸ்பெயினின் அரசுக்குச் சொந்தமான ரயில் சேவை உட்கட்டமைப்பு நிறுவனமான Adif, புதன்கிழமை வெளியிட்ட தகவலில், இரு ரயில்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதைத் தொடர்ந்து குறித்த பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.



உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, இந்த விபத்து காலை 9 மணிக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளது. இதில் Renfe மற்றும் Iryo நிறுவனங்களுக்குச் சொந்தமான இரு ரயில்கள் மோதியுள்ளன.
இதன்போது, Iryo ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக Castilla-La Mancha பிராந்திய அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான விவரங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.








