Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டு நகரில் கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நேற்று (31) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிருவகத்தின் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது சம்பள அதிகரிப்பு, ஊழியர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு, போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ஏ.ஜெகராஜு கருத்து தெரிவிக்கையில், அனைத்து அரச பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களும் சம்பள உயர்வுகோரி போராடிக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு தரப்புகளால் பல தடவை பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு உடன்பாடு காணப்பட்ட இந்தப் பிரச்சினைக்கு கடந்த 27ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவைப் பத்திரம் ஊடாக தீர்வு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால், அந்தக் கூட்டத்தில் சம்பள உயர்வு குறித்து ஆராயும் குழு ஒன்றை அமைக்கும் தீர்மானமே எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளதுடன் இவ்வாறு குழு அமைக்கும் நடவடிக்கையாது சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடுத்து அதை இன்னும் காலம் கடத்தும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

மாணவர்களின் கல்வி நலன்கருதி தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு பணிக்கு மீளத் திரும்புமாறு 2024.05.29 திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவர்களின் நலன் குறித்து பேசும் ஆணைக்குழு தலைவர் பல்கலைக்கழக கட்டமைப்பின் தூண்களாக செயற்படும் அந்த போதனைசாரா ஊழியர்கள் விடயத்திலும் அக்கறை கொள்ள வேண்டும்.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

August 11, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
செய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்

August 11, 2026
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
செய்திகள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?

August 11, 2026
Next Post
கனடாவை விட்டு வெளியேறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

கனடாவை விட்டு வெளியேறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு