Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் பரவலாக மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் பரவலாக மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!

2 years ago
in முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை நேற்றைய தினம் (31.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு என்ற தகவல் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் – கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்தறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் பெட்ரோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு நேற்றைய தினம் (31.05.2023) முதல் இன்றைய தினம் (01. 06.2023) காலை வரை எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்துள்ளது.

கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடீரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் விலைக்குறைப்பும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் 92 ஒக்ரெய்ன் லிட்டருக்கு ரூ.15 வால் குறைத்து ரூ.318 ஆகவும்பெற்றோல் 95 ஒக்ரெய்ன் 20 ரூபாவால் அதிகரித்து ரூ.385 ஆகவும் சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.340 ஆகவும் மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைத்து ரூ.245 ஆகவும் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எரிபொருள் விலை குறைப்பு தகவல் பரவியதையடுத்து, மலையகத்தில் உள்ள பல எண்ணை நிரப்பு நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

எண்ணை விலையில் மாற்றம் ஏற்படப் போகின்றது என்று அறிந்து கொண்டு எண்ணை நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பெட்ரோல் கொள்வனவு செய்யவில்லை.

இதனால் நேற்றைய தினம் (31.05.2023) இரவு அட்டன், கொட்டகலை, தலவாக்கலை உள்ளிட்ட பல பிரதான நகரங்களில் வானங்கள் பெட்ரோல் டீசல் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தன.

இந்த பெட்ரோல் வரிசை காரணமாகப் பிரதான வீதியின் போக்குவரத்து நெரிசல் நிலையும் உருவானது.

பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாததன் காரணமாக முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் உரிமையாளர்கள் தங்களுடைய தொழிலினை செய்ய முடியாது பெரும் நெருக்கடி நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு சில தனியார் பேருந்துகள், டீசல் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே தரித்து வைத்திருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.

வவுனியாவில் நீண்ட வரிசை
வவுனியாவில் எரிபொருளை பெற்றுகொள்ள நீண்ட வரிசை. நகரிலுள்ள இரு நிலையங்களில் எரிபொருள் இல்லை. வவுனியா வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்தோடு நகர மத்தியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் வரிசையில் காத்து நிற்கின்றதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேசமயம் நாட்டில் ஏனைய பகுதிகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த மாணவன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
செய்திகள்

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த மாணவன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

May 15, 2025
துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்
உலக செய்திகள்

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்

May 15, 2025
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி
செய்திகள்

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி

May 15, 2025
இரு மாணவர்களிடையே கை கலப்பில் முடிந்த காதல் பிரச்சனை; திருமலையில் சம்பவம்
செய்திகள்

இரு மாணவர்களிடையே கை கலப்பில் முடிந்த காதல் பிரச்சனை; திருமலையில் சம்பவம்

May 15, 2025
மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா
செய்திகள்

மட்டக்களப்பில் வன இலாகாவினால் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டத்தை நிறுத்திய அருண்ஹேமச்சந்திரா

May 15, 2025
ஹர்ஷன் டி சில்வா கைது!
செய்திகள்

ஹர்ஷன் டி சில்வா கைது!

May 15, 2025
Next Post
ஆளுநரை வைத்து அரசியல் நாடகம்; புறக்கணிக்கப்பட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்!

ஆளுநரை வைத்து அரசியல் நாடகம்; புறக்கணிக்கப்பட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.