பொலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது குறித்த அனைத்துத் தகவல்களையும் இந்திய காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கும்பல் மகாராஷ்டிர மாநிலம் பன்வெல் என்ற இடத்தில் பாகிஸ்தான்ஆயுத விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து பெற்ற ஆயுதங்களுடன் சல்மான் கானின் காரை தாக்க சதி செய்தது.
இந்த கும்பலிடம் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கும்பல் 60 முதல் 70 பேரின் ஆதரவைப் பெற்றுள்ளதுடன், மும்பை காவல்துறை வட்டாரங்களின்படி, சம்பந்தப்பட்ட கும்பல் தயாரித்த சிக்கலான திட்டத்தின்படி ஒவ்வொரு நபருக்கும் ஒரு குறிப்பிட்ட பாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய பின்னர், தாக்குதலாளிகளை தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு தப்பிச் செல்ல அறிவுறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
அங்கு அவர்கள் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இவர்கள் தங்கியிருப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வேறு நாட்டிற்கு பாதுகாப்பாக செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாகவும் இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.