Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மட்டிக்கழியில் அமைக்கப்பட்டுவரும் மீன்வாடி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

மட்டு மட்டிக்கழியில் அமைக்கப்பட்டுவரும் மீன்வாடி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மட்டிக்கழி கடற்கரைப்பகுதியில் ஆலய தீ மிதிப்பின் போது மஞ்சள் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட அம்மன் பீடத்தை சுற்றியுள்ள காணியை மீன் வியாபாரி ஒருவர் சட்டவிரேதமாக அபகரித்து வாடி அமைத்து இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றார் அதனை அகற்றாவிடில் மாநகர சபையை இந்து மக்கள் முற்றுகையிட்டு போராடவுள்ளதாக பிரதேச பொது அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மட்டிக்கழி அறநெறிப் பாடசாலை கட்டிடத்தில் ஆலய பரிபாலன சபை மற்றம் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து நேற்று (02) நடாத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய தீ மிதிப்பின் போது மஞ்சள் குளிப்பதற்காக பார் வீதியிலுள்ள கடற்கரை பகுதியில் சட்ட ரீதியாக அம்மன் பீடம் அமைக்கப்பட்டு, காலம் காலமாக அந்த பகுதியில் கடற்றொழிலாளர்கள் கூட மீன்படி படகுகளை நிறுத்தாது கடற்றொழிலாளர்களும், ஆலய பரிபாலன சபையினரும் புனித பகுதியாக அதனை பராமரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் குறித்த காணியை மட்டு மாநகர சபை ஆணையாளர் கடற்றொழிலாளி ஒருவருக்கு மீன்வாடி அமைப்பதற்கு குத்தகைப்பணமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்று உடன்படிக்கை மூலம் அனுமதியளித்ததையடுத்து அவர் அந்த பகுதியை அபகரித்து மீன் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.

இது தொடர்பாக ஆலய பரிபாலன சபை மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கங்கள், கடற்றொழிலாளர் சங்கங்கள், விளையாட்டு கழகங்கள் இந்த செயற்பாட்டை கண்டித்து அராங்க அதிபர், பிரதேச செயலாளர், மாநகரசபை ஆணையாளர் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இது தொடர்பாக முறைப்பாடுகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் அதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்தபோதும் எதுவிதமான தீர்வும் கிடைக்கவில்லை.

எனினும் பிரதேச செயலாளருக்கு கீழ் உள்ள இந்த அரச காணியை பிரதேச செயலாளரின் அனுமதியின்றி எவ்வாறு மாநகரசபை மீன்வாடி அமைக்க அனுமதி வழங்க முடியும். இது ஒரு மோசடியான செயல் என்பதுடன் இந்து மதத்தை இழிவு படுத்தும் திட்டமிட்ட செயலாகும்.

இந்த இந்து மத இழிவுபடுத்தும் செயலுக்கு உறுதுணையாக சில அரச அதிகாரிகளும், மீன் வியாபாரியுடன் இணைந்து செயற்படுகின்றனர்.

எனவே காலகாலமாக இந்த பகுதி மக்களும் ஆலய பரிபாலனசபை பராமரித்து வரும் அந்த புனித பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கபட்டுவரும் மீன் வாடி உடன் அகற்றப்பட வேண்டும் இல்லாவிடில் இந்து மக்களை அணி திரட்டி மாநகர சபையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
யாழ் வீடொன்றின் மீது தீ மூட்டிய வன்முறை கும்பல்!

யாழ் வீடொன்றின் மீது தீ மூட்டிய வன்முறை கும்பல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.