Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற இளைஞன் கைது!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற இளைஞன் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வேறு ஒருவருக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, செல்லுபடியாகும் விசாவின் மூலம் கனடாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை குடிவரவு அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.

அவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.

விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு நிலையத்திற்கு வந்து அங்கு பணிபுரியும் குடிவரவு அதிகாரியிடம் கடவுச்சீட்டை வழங்கினார்.

கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும் அவரது புகைப்படத்திற்கும் வித்தியாசம் காணப்பட்டதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய மேலதிக தகவல்களைக் கண்டறியும் வகையில், குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.

இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேற திருகோணமலை நீதிமன்றம் தடை விதித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்த இளைஞனை குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு, இந்த இளைஞனின் சூட்கேஸில் அவரது உண்மையான தேசிய அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பிறகு அவர் குடிவரவு அதிகாரிகளிடம் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினார்.

கனடா சென்ற பின்னர் அனுராதபுர நகரத்தில் உள்ள தரகர் ஒருவர் தனக்கு ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாவை தரவேண்டுமென உறுதியளித்து கனடாவில் செல்லுபடியாகும் விசா உள்ள இந்த கடவுச்சீட்டை கொடுத்ததாக இந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளை இலகுபடுத்த விசேட குழு பரிந்துரை!

September 24, 2026
கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் குடியிருப்பு தொகுதி தீ விபத்தில் ஒருவர் பலி ; வீட்டில் 20 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு!

September 24, 2026
22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!

September 24, 2026
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!
செய்திகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!

September 24, 2026
வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு
செய்திகள்

வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு

September 24, 2026
இந்தியாவை ஊடறுத்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை பாதிக்குமா?
செய்திகள்

இந்தியாவை ஊடறுத்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை பாதிக்குமா?

September 24, 2026
Next Post
இலங்கையில் 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்கத் திட்டம்!

இலங்கையில் 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்கத் திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு