முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியினை கர்பமாக்கிய குற்றச்சாட்டில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விசுவமடு தொட்டியடி பகுதியினை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவியை காதலித்து, வீட்டை விட்டு கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய வெள்ளப்பள்ளம் சுதந்திரபுரத்தினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தேடிவந்த பொலிசார் நேற்று முன்தினம் (10) கைது செய்துள்ளனர்.
15 வயது சிறுமியினை கூட்டிச்சென்ற இளைஞன் திருகோணமலையில் உறவினர்களின் வீட்டில் தங்கி நின்று குடும்பம் நடத்தியுள்ளார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் உறவினர்களின் வீடுகளில் தங்கி நின்று சிறுமியுடன் குடும்பம் நடத்தியுள்ளார், இதன் பின்னர் வெள்ளப்பள்ளத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு கூட்டிவந்துள்ளார்.
சிறுமி நான்கு மாத கர்ப்பம் தரித்த நிலையில் காணப்பட்டுள்ளமையினால் புதுக்குடியிருப்பு பொலிஸார் 24 வயதுடைய குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட சிறுமியின் கணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.