அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 14 மற்றும் 16 வயது மதிக்கத்தக்க இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரு மாணவிகள் காணாமல் சென்றமை தொடர்பில் கடந்த 10ஆந் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் வழிநடத்தலில் பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.