Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசைகளில் நிற்க நேரிடும்; ஜனாதிபதி எச்சரிக்கை!

பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசைகளில் நிற்க நேரிடும்; ஜனாதிபதி எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்ற திருப்தி மக்களுக்கு இருக்குமாயின் அந்த வேலைத்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல முடியும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால், நாட்டு மக்கள் மீண்டும் மருந்து, உரம், எரிவாயு, எரிபொருள் வரிசைகளில் நிற்க நேரிடும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்லை வோடர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற பொருளாதார மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் பங்கேற்கும் இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தேர்தல்களின் போது நபர்களை பார்த்து தீர்மானம் எடுக்கும் கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்காக சமர்பிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை நிறைவேற்ற ஆதரவளிக்குமாறும், அதற்கு மாறாக நாட்டின் முன்னேற்றுத்துக்கான வேறு திட்டங்களை வைத்துள்ளவர்கள் அதனை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இன்று அரசியல் வாதிகள் பலதரப்பட்ட வாக்குறுதிகளை வழங்குகின்றனர். அவர்களில் எவரும் நாட்டின் முன்னேற்றுத்துக்கான கொள்கைகளை முன்மொழியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரும், அநுர குமார திசாநாயக்கவும் எந்த இடத்தில் விவாதம் செய்வது என்பது குறித்தே ஒரு மாத காலமாக விவாதித்தனர்.

இறுதியாக ஒரு விவாதத்திற்கு வரவும் இல்லை. இவர்களில் ஒருவரிடத்திலும் நாட்டின் முன்னேற்றத்திற்கான கொள்கைகள் இல்லை.

உங்கள் எதிர்காலத்தை பொறுப்பேற்க அவர்கள் தயாராக இல்லாத பட்சத்தில் உங்களின் எதிர்கால முன்னேற்றத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் குற்றமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் குற்றமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு