ஐ.நா பொதுச் சபையின் 78ஆவது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ் பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி 2023 செப்ரெம்பர் முதல் 2024 செப்ரெம்பர் வரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சார்பாக இலங்கை இந்த முக்கியமான பதவியை ஏற்றுக்கொள்கின்றது.
ஆபிரிக்கா சார்பாக கொங்கோ, சாம்பியா, மொராக்கோ, செனகல், உகாண்டா, சாம்பியாவும் ஆகிய
நாடுகளும் ஆசியா பசிபிக் நாடுகளுக்கு ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளன.கிழக்கு ஐரோப்பியாவுக்கு எஸ்டோனியாவும், இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தீவுகளுக்கு பொலிவியாவின் ப்ளுரரினேஷனல் ஸ்டேட், சுரினாம் போன்ற நாடுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஐ.ந. பொதுச் சபையின் 78ஆவது அமர்வுக்கு துணைத் தலை வர்களாக மேற்கு ஐரோப்பிய மற்றும்பிற மாநிலங்களுக்கு ஐஸ்லாந்து, நெதர் லாந்து ஆகியன தெரிவு செய்யப்பட்டுள்ளன.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைமை நாடுகள், ஐ.நா.பாதுகாப்புச் சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகியவற்றுடன் இணைந்து செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.