சீரற்ற காலநிலை காரணமாக இலங்கைக்குத் திரும்ப முடியாமல் இந்தியாவை அண்மித்த கடற்பகுதியில் தங்கியுள்ள 25 பலநாள் மீன்பிடிப் படகுகள், பாதுகாப்புக் கருதி இந்தியாவின் பிராந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இலங்கை அரசாங்கம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பகுதியில் தீவிரமடைந்துள்ள ‘அர்னாப்’ புயல் காரணமாக, இந்தியாவை அண்மித்த கடற்பகுதியில் தங்கியுள்ள இலங்கை மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்வள அமைச்சு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய, பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடற்பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு குறித்த படகுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கடற்பகுதியில் தங்கியுள்ள படகுகளின் உரிமையாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் மீன்பிடி, நீரியல் வளங்கள் திணைக்களம் ஊடாக உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு நாட்டின் அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்வள அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.








