நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக 2026ஆம் ஆண்டுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்களுக்கு மற்றொரு தினத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் அழகியல் பாட செய்முறைப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் தொடர்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அனர்த்த நிலைமை வழமைக்குத் திரும்பிய பின்னர், குறித்த மாணவர்கள் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான மாற்றுத் திகதி அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.








