Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் கரப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் வாள்வெட்டு சம்பவம்!

யாழ் கரப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் வாள்வெட்டு சம்பவம்!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை, தெருவாரத்தில் உள்ள விளையாட்டுக் கழத்தின் மைதானத்தில் சனிக்கிழமை(15) மாலை 5 மணியளவில் இவ் வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன் போது சிவகுமார் ராகுலன் 25 வயதான இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

மீசாலை, தெருவாரத்தில் உள்ள கரப்பந்து விளையாட்டுக் கழகமொன்று, கரப்பந்து சுற்றுப் போட்டி நடாத்தி வருகிறது. இச் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டி 7:30 மணிக்கு ஆரம்பமாக இருந்தது.

இந்நிலையில் மாலை 5 மணியளவில் 12 பேர் கொண்ட காடையர் கூட்டமொன்று மது போதையில் வாள் மற்றும் பொல்லுகளுடன் உட்புகுந்து அங்கு நின்றிருந்தவர்கள் மீதும் வீதியால் பயணித்தவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இதனை அவதானித்த ஊரவர்கள் மற்றும் விளையாட்டுக் கழக வீரர்கள் தாக்குதல் நடாத்திய காடையர் கூட்டத்தை சுற்றிவளைத்து, காடையர்களை நையப்புடைத்து நால்வரை மடக்கிப் பிடித்து கட்டி வைத்தனர்.

ஏனையவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர். அவர்களைத் துரத்திச் சென்றபோதும் காடையர்கள் கூட்டம் தப்பித்துச் சென்றுள்ளனர்.

ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நால்வரையும் மின் கம்பத்துடன் கட்டி வைத்து விட்டு, கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடிகாமம் பொலிஸார் நான்கு காடையர்களையும் கைதுசெய்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் கத்தி என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதாகிய நால்வரும் 17 மற்றும் 18 வயதுகளையுடையவர்கள் என்றும் தாக்குதல் நடாத்த வந்த ஏனையோரும் குறித்த வயதினையுடைவர்கள் என்றும், இவர்கள் மந்துவில், எழுதுமட்டுவாழ், உஷன், கொடிகாமம் பகுதிகளைச் சேர்ந்த வெளிக் கிராமங்களைச் சேர்ந்த பதின்ம வயதினரே என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடாத்திய ஏனையோரையும் கொடிகாமம் பொலிஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டி அணியாத 2,000 பேருக்கு அபராதம்

September 30, 2026
ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!
செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பிடியாணை!

September 30, 2026
ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!
செய்திகள்

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

September 30, 2026
அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின!

September 30, 2026
மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
காணொளிகள்

மட்டக்களப்பில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

September 30, 2026
திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்;  மொனராகலையில் விநோத சம்பவம்
செய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்; மொனராகலையில் விநோத சம்பவம்

September 30, 2026
Next Post
போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் விபரம்; வழங்க மறுக்கும் உக்ரைன்!

போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் விபரம்; வழங்க மறுக்கும் உக்ரைன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு