கம்பஹா பிரதேசத்தில் வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிவேரிய – கிரிந்திவெல வீதியில் ஹெநெகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிவேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று முன்தினம் (18) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கம்பஹா ,வத்துருகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.
கெப் வண்டி ஒன்று வெலிவேரியவிலிருந்து கிரிந்திவெல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ரதவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கெப் வண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிவெரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்