யாழ்ப்பாணம் -சுன்னாகம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம் (19) சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த வேளை சுன்னாகம் காவல்துறையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு இலட்சம் பெறுமதியான கோடா மற்றும் ஆறாயிரம் மில்லிலீட்டர் கசிப்பு என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.