Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆராேக்கியமான சிறுநீரகத்தை அகற்றிய வைத்தியர்; சிறுவனின் மரணம் தொடர்பில் மறைக்கப்படும் உண்மை!

ஆராேக்கியமான சிறுநீரகத்தை அகற்றிய வைத்தியர்; சிறுவனின் மரணம் தொடர்பில் மறைக்கப்படும் உண்மை!

2 years ago
in செய்திகள்

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த சிறுவனொருவனுக்கான சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது ஆராேக்கியமான நிலையில் இருந்த சிறுநீரகமும் நீக்கப்பட்டிருந்த சம்பவம் இடம்பெற்று ஒருவருடமாகியும் இது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் இந்த அறிக்கை எப்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலவிடமே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த ஹம்தி என்ற 3 வயது சிறுவன் கடந்த வருடம் ஜூலை மாதமளவில் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது, சிறுவனது ஆராேக்கியமான நிலையில் இருந்த சிறுநீரகமும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதால் குறித்த சிறுவன் உயிரிழந்தான். சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இது தொடர்பாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதளவில் ரவூப் ஹக்கீம் எம்.பி இந்த சபையில் முன்னாள் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது, சுகாதார அமைச்சு இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

அந்த விசாரணை அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடமாகியும் அந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

அதனால் இந்த விசாரணை அறிக்கையின் நிலைமை என்ன? அற்த அறிக்கையை எப்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என கேட்கிறேன் என்றார்.

இதற்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல பதிலளிக்கையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை அமைச்சின் செயலாளர் ஊடாக பாராளுமன்றத்துக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இன்றைய தினத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
Next Post
துருக்கியில் காட்டுத் தீ; ஐந்து பேர் பலி!

துருக்கியில் காட்டுத் தீ; ஐந்து பேர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு