Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை அரசை கண்டித்து அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள இராமேஸ்வரம் மீனவர்கள்!

இலங்கை அரசை கண்டித்து அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள இராமேஸ்வரம் மீனவர்கள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை (24) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை 507 மீன்பிடி விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜஸ்டின், ரெயிமென்ட் மற்றும் கெரின் ஆகியோருக்கு சொந்தமான 3 மீன்பிடி விசைப் படகுகளையும் அதில் இருந்த சுரேஷ் பாபு, காளிதாஸ், ரூபின், கண்ணன், நாகராஜ் உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்து ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, நேற்று இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள், மீனவர்கள் மற்றும் விசைப்படகின் உரிமையாளர்கள் இராமேஸ்வரம் துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! - tamilnews.lk

அந்த கூட்டத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்பு தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்ததால் இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
வட மாகாண அதிபர்களை அழைத்துள்ள இலங்கை அதிபர் சேவை சங்கம்!

வட மாகாண அதிபர்களை அழைத்துள்ள இலங்கை அதிபர் சேவை சங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு