Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளையை சுகவீன விடுமுறை போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை; ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவிப்பு!

நாளையை சுகவீன விடுமுறை போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை; ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

நாளைய தினம் (26) சம்பள நிலுவையினை வலியுறுத்தி அதிபர், ஆசிரிகளினால் முன்னெடுக்கப்படவுள்ள சுகவீன விடுமுறை போராட்டத்துக்கு தாம் ஆதரவளிக்க போவதில்லை என பாடசாலைகளில் ஆசிரிய பணிக்கென இணைக்கப்பட்டு ஆசிரிய பணி புரிந்துவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பட்டதாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எதிர் வருகின்ற 2024.06.26 ம் திகதி இலங்கை அதிபர், ஆசிரியர் சங்கங்கள் சம்பள உயர்வு குறித்து அன்றைய நாள் சுகவீன பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இருப்பினும் பாடசாலைகளில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பாடசாலைகளிலே பணியாற்றுகின்றனர். அதன்படி இப்போராட்டம் நமக்கானதல்ல.

இலங்கையில் உள்ள எந்த ஒரு ஆசிரியர் சங்கங்களோ, அதிபர் சங்கங்களோ எமது நியாயமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவில்லை, குரல் கொடுக்கவில்லை.

பல்வேறுபட்ட இடர்களுடன் கடந்த (10/06/2024) அன்று கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் எமது பாடசாலைகளில் ஆசிரிய பணி புரிந்துவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்னல்களுக்கு உட்பட்டு, வைத்திய சிகிச்சைகளை பெற்று வருகின்ற நிலையிலும் இன்றுவரை எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், எமது நியமனம் சார்ந்த சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்து கொழும்பு கோட்டைக்கு முன்னால் இடம்பெற்று வருகிறது.

எனவே “பாடசாலை சார்ந்த அரச உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக” எந்த குரலும் எழுப்பாத இவர்களின் போராட்டத்திற்கு எமது ஆதரவை வழங்க முடியாது.

எனவே அன்றைய நாள் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலையில் ஆசிரிய பாணி புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் பாடசாலைக்கு சென்று “மாணவர்களது கல்வி நிலையின் பாதிப்பை தவிர்த்து” செயற்படுமாறு அன்போடு வேண்டுகின்றோம் என இலங்கை பட்டதாரி ஒன்றியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதே சமயம் இன்று 16வது நாளாக கொழும்பு புகையிரத கோட்டை நிலையம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வருகின்றமை என்பதும், அபிவிருத்தி உத்தியாகத்தர்களுக்காக அதிபர், ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுக்காமை போன்ற காரணிகளால் நாளைய போராட்டத்திற்க்கு வலு சேர்க்க தமது ஆதரவை வழங்க போவதில்லை என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!

August 31, 2026
மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

August 31, 2026
பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

August 31, 2026
செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!
செய்திகள்

செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

August 31, 2026
தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; ரவூப் ஹக்கீம்!
அரசியல்

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; ரவூப் ஹக்கீம்!

August 31, 2026
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு!

August 31, 2026
Next Post
இந்தியாவில் ஏன் உங்கள் இயக்கத்தை தடை செய்யக் கூடாது? ; விடுதலைப் புலிகளிடத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

இந்தியாவில் ஏன் உங்கள் இயக்கத்தை தடை செய்யக் கூடாது? ; விடுதலைப் புலிகளிடத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு