Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு; இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு; இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொதுமக்கள் மாலை வேளைகளில் குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்கான முக்கிய இடமாக விளங்கும் இந்த கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா, ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

கடந்த 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் பூங்கா திறந்து வைக்கப்பட்டதுடன், அதன் பின்னர் பராமரிப்புப் பொறுப்பு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தற்போது பூங்கா முறையான பராமரிப்பின்றி காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் இயங்காததால் இரவு நேரங்களில் முழுப் பகுதியும் இருள் சூழ்ந்துள்ளதாகவும், தூய்மைப் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படாததால் குப்பைகள் தேங்கி சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலை காரணமாக, பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலமாகக் குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அரச நிதியில் உருவாக்கப்பட்ட இந்தப் பொதுச் சொத்து உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், இதற்கான காரணம் என்ன என்பதையும் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, பூங்காவில் நிலவும் மின்சாரக் கோளாறுகளை உடனடியாகச் சீரமைத்து, சுத்தம் மற்றும் பராமரிப்புப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் சுகாதாரமான சூழலிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் மீளமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
அம்பாறை தமிழர்களின் உரிமையை பறிக்கும் அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது; ஜெயா சரவணன்

அம்பாறை தமிழர்களின் உரிமையை பறிக்கும் அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது; ஜெயா சரவணன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு