Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் “உம் உதிரத்தால் அறம் செய் ஓர் உயிர் பிரியா நிலை காக்க உம் உன்னத உதிரம் தர வாரீர்”; எனும் தொனிப் பொருளில் உலக இரத்ததான தினத்தினை முன்னிட்டு மாவட்ட மட்டத்திலான இரத்ததான முகாம் வியாழக்கிழமை (27) ஆம் திகதி நேற்று களுவாஞ்சிகுடியிலுள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் மண்முனை தென் எருவில் பற்று திட்ட செயற்பாட்டு குழு தலைவி திருமதி.ஏஞ்சலா கணேசலிங்கம் தலைமையிலும், திட்ட செயற்பாட்டு குழு உபதலைவர் திரு.வ.குணசேகரம் ஒருங்கிணைப்பிலும், அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ்ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலிலும், அமைப்பின் அமைப்பாளர் யோ.இதயகீதன் அவர்களின் மேற்பார்வையில் இவ் இரத்த தான முகாமானது காலை 9.00 மணி தொடக்கம் 2.30 மணி வரை நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அபயவிக்கிரம நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையம் களுவாஞ்சிகுடி ,சிறப்பு அதிதியாக வி.தவேந்திரன் நிர்வாக உத்தியோகத்தர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், கௌரவ அதிதிகளாக பி.திவிதரன் பிரதி கல்வி பணிப்பாளர் வலய கல்வி அலுவலகம் பட்டிருப்பு, மற்றும் ம.சத்தியநாராயணன் கிராம சேவை உத்தியோகத்தர் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவு ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் அமைப்பின் இயங்கு நிலையில் இருக்கும் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான மண்முனை வடக்கு, மண்முனை பற்று, மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று பிரதேச பிரிவுகளில் இருந்து சுமார் 83 அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள்; மற்றும் இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என 45 குருதி கொடையாளர்கள் இவ் உன்னத பணியில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

அதேசமயம் இன் நிகழ்விற்கு பார்வை ஒளியியல் பரிசோதனை நிலையத்தால் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 30 ற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், விசேடவிதமாக குருதி கொடையாளர்களுக்கும் உலகத்தன்மம் சமூக அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
Next Post
கொழும்பில் நாளை 15 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பில் நாளை 15 மணிநேர நீர் வெட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.