Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்; பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்; பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

59 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த வன்முறைச் சம்பவங்களில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வன்முறையின் தீவிரத்தன்மை காரணமாக 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலரது உடல்களில் துப்பாக்கிக் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றைச் சிறைவாசி ஒருவர் காட்டிக்கொடுத்ததாகக் கூறப்படும் முறுகல் நிலையே, சுமார் 1,800 கைதிகள் உள்ள இந்தச் சிறைச்சாலையில் இத்தகைய பெரும் வன்முறைக்கு முதற்காரணமாக அமைந்துள்ளது.

நேற்று நள்ளிரவில் அதிகாரிகளால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சூழல், இன்று காலை மீண்டும் கைதிகளின் திட்டமிட்ட தாக்குதலால் சீர்குலைந்தது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

தற்போதைய நிலவரப்படி, சிறைச்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சிறைச்சாலை வளாகத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு, வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கலகெடிஹேனில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களுடன் பெண் கைது!
செய்திகள்

கலகெடிஹேனில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களுடன் பெண் கைது!

July 6, 2026
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!
செய்திகள்

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

July 6, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்!

July 6, 2026
ஜூலை முதல் செப்டம்பர் காலப்பகுதியில் எல் நினோ இலங்கையில் தீவிரமடையும்
செய்திகள்

ஜூலை முதல் செப்டம்பர் காலப்பகுதியில் எல் நினோ இலங்கையில் தீவிரமடையும்

July 6, 2026
வெனிசுலா நிலநடுக்கம்; உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு!
உலக செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம்; உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு!

July 6, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!

July 6, 2026
Next Post
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு