Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் திறக்கப்படவுள்ளது

மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் திறக்கப்படவுள்ளது

1 hour ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் இந்திய விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்திய குடியுரிமை (OCI), ஆவண உறுதிப்படுத்தல் (Attestation) உள்ளிட்ட தூதரக சேவைகளை வழங்குவதற்கான புதிய வெளிச்சேவை வழங்குநராக (Outsourcing Service Provider – OSP) Alhind Global Services நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், 2026 ஜூலை 7 ஆம் திகதி முதல் Alhind Global Services நிறுவனம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டியிலுள்ள உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களிலுள்ள இந்திய துணைத் தூதரகங்களின் சார்பில் குறித்த சேவைகளை வழங்கவுள்ளது.

மேலும், தூதரக சேவைகளை மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் (Indian Consular Application Centre – ICAC) புதிதாக திறக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிழக்கு மாகாண மக்களுக்கு இந்திய விசா மற்றும் ஏனைய தூதரக சேவைகளைப் பெறுவதற்காக தொலைதூர பகுதிகளுக்கு பயணிக்க வேண்டிய அவசியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 7 முதல் விசா, கடவுச்சீட்டு, OCI மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான முன்பதிவுகளை ICAC Sri Lanka இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதேபோல், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் அமைந்துள்ள புதிய ICAC மையங்களில் சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு

No. 536, Bauddhaloka Mawatha, Colombo 08

கண்டி

First Floor, Building No. 478/1/B, Wathuwala, Nugawela, Harispattuwa, Kandy

யாழ்ப்பாணம்

No. 43, Racca Road, Jaffna – 40000

ஹம்பாந்தோட்டை

CGHW Highway, Hambantota

மட்டக்களப்பு

No. 25, Lake Road 01, Puliyanthivu (Puliyanthivu West 179A), Batticaloa

Tags: BattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!
செய்திகள்

உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

July 6, 2026
நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?

July 6, 2026
கலகெடிஹேனில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களுடன் பெண் கைது!
செய்திகள்

கலகெடிஹேனில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களுடன் பெண் கைது!

July 6, 2026
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!
செய்திகள்

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

July 6, 2026
சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்; பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!
செய்திகள்

சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்; பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

July 6, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்!

July 6, 2026
Next Post
நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?

நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு