Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
11.6 பில்லியன் ரூபாவை விடுவித்தது நலன்புரி நன்மைகள் சபை!

11.6 பில்லியன் ரூபாவை விடுவித்தது நலன்புரி நன்மைகள் சபை!

2 years ago
in செய்திகள்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நன்மைகள் சபை 11.6 பில்லியன் ரூபாவை வியாழக்கிழமை (27) விடுவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தில், பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5000 ரூபா என்ற அடிப்படையில் 2023 ஜூலை மாதத்தில் இருந்து 31.03.2024ஆம் திகதி வரையிலும், இடைநிலைப் பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கும் குழுவின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 2500 ரூபா என்ற அடிப்படையில் 2023 ஜூலை மாதம் முதல் 31.12.2023 ஆம் திகதி வரையிலும் கொடுப்பனவுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மற்றும் இடைநிலை பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கொடுப்பனவு வழங்குவதற்கான காலத்தை இவ்வருடத்தின் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அதன் கீழ் பாதிக்கப்பட்ட மற்றும் இடைநிலை பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களுக்கான கொடுப்பனவுகளை 2024 ஜூலை முதல் 2024 டிசம்பர் வரையில் 5000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மிக வறுமை மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழானவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவும் தொடர்ச்சியாக வழங்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரும் ஆணையாளருமான ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்

September 25, 2026
கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
Next Post
நல்லாட்சி அரசாங்க காலத்தில் என்னை சிறையில் அடைத்தவர் ரணில்; பிள்ளையான் தெரிவிப்பு!

நல்லாட்சி அரசாங்க காலத்தில் என்னை சிறையில் அடைத்தவர் ரணில்; பிள்ளையான் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு