Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்

48 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சித்தாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்க சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரான தங்கராசா பிரதீபா என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளியான மூத்தவன் வாசன் என்பவர் தங்கராசா பிரதீபா என்ற பெண்ணை திருமணம் முடித்து 10 , மற்றும் 7 வயதில் மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான கணவன் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு சென்று மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான நேற்று மனைவியின் கையடக்க தொலைபேசியை கணவன் எடுத்துச் சென்று அதனை விற்பனை செய்து பணத்தை எடுத்து அதற்கு மதுபானம் வாங்கி குடித்துவிட்டு வீடு வந்துள்ளார்.

இதையடுத்து கணவன் மனைவிக்கிடையே நீண்ட நேரம் தகராறு இடம்பெற்று வந்துள்ள நிலையில் மனைவி வீட்டில் இருந்து வெளியேறி சித்தாண்டி கலைமகள் வீதியில் உள்ள கணவனின் தாயாரான மாமியாரிடம் கணவனை பற்றி முறையிடுவதற்கு அங்கு சென்றுள்ள நிலையில் மனைவியை பின் தொடர்ந்து சென்ற கணவர் தனது தாயார் வீட்டில் வைத்து மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதையடுத்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிஸ் அவசர சேவை 119 அறிவித்ததையடுத்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்தாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த நபர் கடந்த மாதம் 24ம் திகதி போதை பொருளுடன் கைது செய்ததுடன் மது போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நீதவானின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Tags: BatticaloaBatticaloaNewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்
செய்திகள்

இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்

September 25, 2026
சவூதி அரேபிய தேசிய தின வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு!
செய்திகள்

சவூதி அரேபிய தேசிய தின வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு!

September 25, 2026
மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை; பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
செய்திகள்

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை; பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

September 25, 2026
கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
Next Post
மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை; பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

மலையகத்தில் தொடரும் சிரற்ற வானிலை; பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு