Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் முந்திய குழந்தை பருவ (முன்பள்ளி) சிறுவர்களின் டிஜிட்டல் திரை (Screen Time) பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, முந்திய குழந்தை பருவத்திலுள்ள சிறுவர்களில் 64 சதவீதமானோர் தினமும் அரை மணித்தியாலத்திற்கு அதிகமான நேரத்தை கைபேசிகள் அல்லது கணினிகளைப் பார்ப்பதில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின்படி, சிறுவர் ஒருவர் தினமும் அரை மணித்தியாலத்திற்கும் குறைவான நேரமே டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார். 

இந்நிலையைக் கருத்திற் கொண்டு, முன்பள்ளிச் சிறுவர்களுக்காகச் சுகாதார மேம்பாட்டுத் திட்டம் ஒன்றையும் வழிகாட்டித் தொடர் ஒன்றையும் அறிமுகப்படுத்தச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது குறித்து தெளிவுபடுத்துவதற்காகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க:“இலங்கையில் 64% சிறுவர்கள் திரைப் பயன்பாட்டை (Screen Time), அதாவது தொலைபேசி அல்லது பேட் (Pad) பயன்பாட்டை தினமும் 30 நிமிடங்களுக்கும் அதிகமாகக் கொண்டுள்ளனர். 

இது 30 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் அளவுகோலாகும். இதனிடையே, சிறுவர்களில் 32% பேர் தினமும் 10 – 11 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரமே உறங்குகின்றனர். 

சுமார் 43% சிறுவர்கள் உணவு உண்ணும்போது திரையைப் பார்த்தவண்ணமே உணவருந்துகின்றனர். உணவை விழுங்கும்போது உணவைப் பற்றிய கவனம் சிறுவர்களின் மனதில் இருக்காது. இதேவேளை, சுமார் 80% சிறுவர்களே இருவேளை பல் துலக்குகின்றனர்” என்றார். 

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க:”சிறுவர்களைப் பராமரிப்பவர்கள் பெற்றோராகவோ அல்லது முன்பள்ளி ஆசிரியராகவோ இருந்தாலும், சுமார் 56% பேர் சிறுவர்கள் மீது கோபப்படும் நிலை காணப்படுகிறது. 

மேலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தந்தையர்களே குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளனர் என்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

குழந்தைகளைப் பராமரிப்பது தாயின் பொறுப்பு மட்டுமே என்ற நிலை உருவாகியுள்ளது. 53% தந்தையர்களே குழந்தைகளுடன் நெருக்கமாகச் செயல்படுகின்றனர்…” எனக் கூறினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

September 24, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு