குருவிட்ட சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகள் நேற்று (28) சட்ட நடவடிக்கைகளுக்காக வரகாபொல துல்ஹிரிய நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சிறைச்சாலை அதிகாரிகளை தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களைக் கண்டுபிடிக்க வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் கோனபொல பிரதேசத்தை சேர்ந்த ரொஷான் அசங்க கந்தப்பா எனவும் மற்றைய சந்தேக நபர் ஹொரண தவுலகலவத்தையை சேர்ந்த ஜே.டி.சன்ன பிரபோத எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 24 மற்றும் 29 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேகநபர்களுக்கு பெல்மடுல்ல, அத்தனகல்ல, ஹொரண, வரக்காபொல ஆகிய நீதிமன்றங்களில் பல வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களை தேடும் விசாரணைகளுக்காக பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியும் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.