பிரான்ஸில் சுற்றுலா பயணிகள் சென்ற சிறிய விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தானது பிரான்ஸின் கொல்லேஜியன் என்ற நகரத்திற்கு அருகில் உள்ள A4 நெடுஞ்சாலையில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, விமானத்தில் பயணித்த 3 சுற்றுலா பயணிகள் வரை உயிரிழந்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விபத்தானது விமானம் மின்சார கம்பியில் மோதியதால் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், விமான விபத்து காரணமாக நெடுஞ்சாலை இரு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதேவேளை, வாகனங்களும் விபத்தில் சிக்கவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இது தொடர்பாக வெளியான புகைப்படங்களில் நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானம் சிதைந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.