Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடவும்; வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு!

தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடவும்; வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு ஆளுநர் , நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. அபயம் பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் ஆளுநருக்கு களவிஜய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மாகாணத்திற்குள் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாது இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களைச் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

September 25, 2026
பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv
செய்திகள்

பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv

September 25, 2026
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!

September 25, 2026
Next Post
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கு பதில் அரச அதிபர்கள் நியமனம்!

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கு பதில் அரச அதிபர்கள் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு