Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதில் அதிபர்களுக்கு அதிபர் சேவையில் எந்த வரப்பிரசாதங்களும் கிடைப்பதில்லை; கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

பதில் அதிபர்களுக்கு அதிபர் சேவையில் எந்த வரப்பிரசாதங்களும் கிடைப்பதில்லை; கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

நாட்டில் மொத்தமாக 2984 பதில் அதிபர்கள் பாடசாலைகளில் சேவையாற்றி வருகின்றனர். அவர்கள் ஆசிரியர் சேவையின் கீழே செயற்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்புகளும் ஆசிரியர் சேவையின் பிரகாரமே இடம்பெறும். அதிபர்களுக்கான சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (8) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான, கேள்வி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், நாட்டில் கடமையாற்றும் பதில் அதிபர்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

நாட்டில் மொத்தமாக 2984 பேர் பாடசாலைகளில் பதில் அதிபர்களாக கடமையாற்றி வருகின்றனர். அவர்களில் மேல் மாகாணத்தில் 203பேர், மத்திய மாகாணத்தில் 528 பேர், சப்ரகமுவ மாகாணத்தில் 459பேர், வடமத்திய மாகாணத்தில் 332பேர் வடமேல் மாகாணத்தில் 373பேர், ஊவா மாகாணத்தில் 367பேர், தென் மாகாணத்தில் 316பேர், கிழக்கு மாகாணத்தில் 254பேர் மற்றும் வடக்கு மாகாணத்தில் 152பேர் இருக்கின்றனர். என்றாலும் இவர்களில் சுமார் ஆயிரம் பேர் வரை தற்போது ஓய்வு பெற்றுச்சென்றுள்ளனர்.

அத்துடன் பாடசாலைகளில் ஆசிரியர் சேவையில் இருப்பவர்களே பதில் அதிபர் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு பதவி உயர்வுகளின்போதும் சம்பள உயர்வுகளின்போதும் ஆசிரியர் சேவையின் பிரகாரமே இடம்பெறும் அதிபர் சேவையின் பிரகாரம் அவர்களுக்கு அந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இடம்பெறுவதில்லை.

அத்துடன் பதில் அதிபர்களாக கடமையாற்றும் ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறும்போது பதில் அதிபர்களாக இடமாற்றம் செய்யப்படுவதில்லை.

மாறாக அவர்கள் ஆசிரியர் சேவையின் பிரகாரம் இடமாற்றம் கோரினால் அதற்கு ஏற்றவகையில் இடமாற்றம் பெற்றுக்கொடுக்கப்படும்.

மேலும் பதில் அதிபர்களாக கடமையாற்றுபவர்களை நிரந்தர சேவையில் உள்வாங்க பல தடவைகள் முயற்சித்தபோதும் அதற்கு தொழிற்சங்கங்கள், தடைகளை ஏற்படுத்தி நீதிமன்றம் சென்றதால் அந்த நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

என்றாலும் அந்த அதிபர்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ள கொள்கையளவில் விரைவில் தீர்மானம் மேற்கொள்வோம்.

அத்துடன் நாட்டில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பதில் அதிபர்கள் பாடசாலைகளில் கடமையாற்ற காரணமாக இருப்பது. அதிபர் வெற்றிடங்களை நிரப்ப உரிய காலத்துக்கு போட்டிப்பரீட்சைகளை நடத்தி நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க தவறியமையாகும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்கும் இலங்கை தமிழன்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்கும் இலங்கை தமிழன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.