பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 9 மாதமாக நடந்து வரும் போரில் சுமார் 38,011 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 87, ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர்.
இதேவேளை, பலஸ்தீன பிராந்தியத்தில் மிக ஆபத்தான தோல் நோய் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக தோல் நோய் பரவுவதாக தெரிவிக்கப்படுகி்ன்றது.
சிரங்கு, சின்னம்மை, பேன், கொப்புளங்கள் ஏற்படும் ஒருவகை தோல் வியாதி மற்றும் பலவீனப்படுத்தும் சொறி வரை பரவுவதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.
நேற்று தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் மூன்று பிராந்தியங்களில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற முகமது நாமேஹ் நாசர் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டார்.
குறித்த சம்பவத்திற்கு பதிலடியாக இஸ்ரேல் உள்ள பல இராணுவ தளங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.