மாகாண சபைகளுக்கோ உள்ளூராட்சி சபைகளுக்கோ இப்போதைக்குத் தேர்தல் நடத்தும் எண்ணம் ஏதுமில்லை, பதிலாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்காலச் சபை ஒன்றை அமைப்பதே தனது திட்டம் என்று நேற்றுத் தமிழ் அரசுக்கட்சியினருக்குத் திட்டவட்டமாக அறிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் இரா.சமபந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணாக்கியன், த.கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பிலேயே ரணில் மாகாண சபைகளுக்கான இடைக்கால நிர்வாகம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.
கடந்த முறைவடக்குகிழக்கு தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள்அனைவரையும் நிர்வாகம் சந்தித்தபோதும் அவர் இதே இடைக்கால தொடர்பில் பேச்சைத் தொடக்கியிருந்தார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமானசி.வி.விக்னேஸ்வரன் அதற்கான முன்மொழிவுகளை – வரைவுத்திட்டம் ஒன்றை-அப்போது முன்வைத்திருந்தார். ரணில் விக்கிரமசிங்கவும் அதனை ஆமோதித்திருந்தார். ஆனால், தமிழ்த் தேசியம் பேசும் ஏனைய கட்சிகள் அதனை உடன டியாகவே எதிர்த்திருந்தன.
இந்தச்சந்திப்பில்மாகாண இடைக்கால நிர்வாக சபை தொடர்பிலேயே ரணில் அழுத்தமாகக் குறிப்பிட்டார். அத்தகைய இடைக்கால நிர்வாக சபை வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து அமையுமா அல்லது தனித்தனியாக அமையுமா என்று அவர் கேள்வி எழுப்பினர் தமிழ் அரசுக் கட்சியினர். அதற்குத் தெளிவான பதில் எதனையும் வழங்காத ஜனாதிபதி அது பற்றி தமிழ்க் கட்சிகளுடன் பேசி இணக்கம் காணலாம் என்று
தெரிவித்தார்.
அரசியல் தீர்வு மற்றும் காணி விடுவிப்புத் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு மாதங்களில் அந்தக் குழுக்களின் அறிக்கைகள் கிடைத்துவிடும் என்றும் அவற்றைத் தமிழ்க் கட்சிகளிடம் வழங்கி அவை தொடர்பில் ஆராயலாம் என்றும் இந்தச் சந்திப்பில் ரணில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பேச்சுக்குப் பதிலளித்துப் பேசிய இரா. சம்பந்தன். இப்படிப் பயனற்ற பேச்சுக்களில் தொடர்ந்தும் ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்றார். பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டபோது உடனடிப்
பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை, அரசியல் தீர்வும் காணப்படவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார். தமிழ் மக்களின் விருப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்று விரைவில் – இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் – முன்வைக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாவிடின் வெளியக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெறும் முயற்சியில் நாங்கள் வெளிப்படையாகவே இறங்குவோம் -என்றார்.