இலங்கை மருத்துவக் கல்லூரி கவுன்சிலின் புதிய பதிவாளர் பதவிக்கு பேராசிரியர் ஜெனிபர் பெரேராவை நியமிக்க சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நடவடிக்கை எடுத்தார்.
அதற்கான நியமனக் கடிதத்தை சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் வைத்து அவருக்கு வழங்கினார்.

இந்த நியமனம் மருத்துவ கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டுள்ளது. ஜெனிஃபர் பெரேரா, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சிறந்த சேவையைச் செய்த ஒரு பேராசிரியர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.