போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட யுவதி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மொரட்டுவை லுனாவ பகுதியில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த வீட்டில் இருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதான யுவதி மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.