எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை அவரது அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலெனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (17) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டின் தொழிலாளர் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது, அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகளை மீறும் செயலாகும்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எப்போதும் முன்னின்று செயற்பட்ட ஒருவரான ஆனந்த பாலித்தவின் மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் மீறப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.







