Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முஸ்லிம் கட்சிகள் புகழ்வது போன்று சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை; ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவிப்பு!

முஸ்லிம் கட்சிகள் புகழ்வது போன்று சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை; ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவிப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள்

முஸ்லிம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை. அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாரே தவிர முஸ்லிம் கட்சிகள் அவரை ஹீரோவாக கூறுவதற்கு சம்பந்தன் முஸ்லிம் சமூகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்தார்.

அம்பாறை – கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதலில் இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். எந்த மனிதனும் மரணித்தாலும் இரங்கலை நாங்கள் தெரிவிப்பது சம்பிரதாயம் ஆகும். ஆனால் தற்போது முஸ்லிம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதை நாங்கள் தைரியத்துடன் கூற விரும்புகின்றோம். அதனால் தான் எங்கள் கட்சி அவர் தொடர்பிலான எந்தபொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாரே தவிர தமிழ் முஸ்லிம் உறவிற்கு பங்களிப்பு செலுத்தவில்லை. கல்முனை என்பது எந்த கால பிரச்சினை. சம்பந்தன் தலைவராக இருந்த காலத்தில் இருந்து காணப்படும் பிரச்சினை. நாங்களும் ஊடகங்கள் வாயிலாக பல வருடங்களாக கூறி வருகின்றோம். சம்பந்தன் ஏன் இதில் தலையிடாமல் இருக்கின்றார். அவர் கல்முனையில் உள்ள அரசியல்வாதிகளை அழைத்து கல்முனை பிரச்சினைக்கு தீர்வு கண்டு இருக்கலாம்.

ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, கல்முனை உப பிரதேச செயலக விடயம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஹென்றி மகேந்திரன் உட்பட நானும் கலந்து கொண்டிருந்தேன்.

இங்கு சம்பந்தன் கட்சி தலைவர் ஒருவர் வந்திருக்கின்றார். ஏன் இங்கு கலந்துரையாடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் (றவூப் ஹக்கீம்) வரவில்லை. அப்போது நான் அங்கு ஒரு பிரச்சினை எழுப்பினேன். இந்த கலந்துரையாடலில் தலைவர்கள் தான் பேச வேண்டும். ஒரு பிரதி தலைவரோ அல்லது உப தலைவரோ கலந்து கொண்டால் சமத்துவமாக அமையாது என்று கூறி வெளிநடப்பு செய்துவிட்டேன்.

அப்போது அந்த நேரத்திலாவது சம்பந்தன் முஸ்லிம் தரப்பின் சார்பாக ஹக்கீமை வரவழைத்திருக்க வேண்டும். அதனூடாக இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்து கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு தீர்வினை பெற்றிருக்க முடியும்.

மிக இலகுவாக தீர்வு காண வேண்டிய பிரச்சினையை ஹக்கீமுடன் இணைந்து சம்பந்தனும் இழுத்தடித்தார் என்பதே கவலைக்குரியதாகும். ஆகவே மறைந்த ஒருவரை நாங்கள் வேண்டும் என குற்றஞ்சாட்டவில்லை. ஆனால் முஸ்லிம் கட்சிகள் அவரை ஹீரோவாக கூறுவதற்கு சம்பந்தன் முஸ்லிம் சமூகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. அத்துடன் தமிழ் முஸ்லிம் உறவிற்கு கூட ஒன்றும் செய்யவில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகின்றோம் என தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !
செய்திகள்

கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !

November 3, 2026
ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை மீண்டும் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி!
உலக செய்திகள்

ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை மீண்டும் கைப்பற்றினார் முகேஷ் அம்பானி!

November 3, 2026
பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!
செய்திகள்

பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!

November 3, 2026
1983 கருப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் விசேட நாடாளுமன்றக் குழு! பாராளுமன்றத்தில் புதிய யோசனை சமர்ப்பிப்பு!
செய்திகள்

1983 கருப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் விசேட நாடாளுமன்றக் குழு! பாராளுமன்றத்தில் புதிய யோசனை சமர்ப்பிப்பு!

November 3, 2026
ஈரான் தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்த சொகுசு கார்; பயங்கரவாதச் செயலா எனப் பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

ஈரான் தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்த சொகுசு கார்; பயங்கரவாதச் செயலா எனப் பொலிஸார் தீவிர விசாரணை!

November 3, 2026
அக்குரஸ்ஸ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்!
செய்திகள்

அக்குரஸ்ஸ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்!

November 3, 2026
Next Post
வெளிநாட்டிற்கு சென்று முறைகேடாக நடப்பவர்கள் கருப்புப் பட்டியலில் இணைப்பு; மனுஷ நாணயக்கார எச்சரிக்கை!

வெளிநாட்டிற்கு சென்று முறைகேடாக நடப்பவர்கள் கருப்புப் பட்டியலில் இணைப்பு; மனுஷ நாணயக்கார எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.