Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்த சொகுசு கார்; பயங்கரவாதச் செயலா எனப் பொலிஸார் தீவிர விசாரணை!

ஈரான் தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்த சொகுசு கார்; பயங்கரவாதச் செயலா எனப் பொலிஸார் தீவிர விசாரணை!

34 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பில் அமைந்துள்ள ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புச் சுவரில் சொகுசு கார் ஒன்று மோதிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் சாதாரண வாகன விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கையா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் சின்னமன் கார்டன்ஸ் பொலிஸார் விசாரணை விபரங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான சொகுசு காருக்குள் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தனவா என்பதைக் கண்டறிய விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்காக அரச பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கப் பிரிவு மற்றும் பொலிஸ் மோப்ப நாய்ப் பிரிவு ஆகியவற்றின் உதவியும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் காரைச் செலுத்தியதாகக் கூறப்படும் 27 வயதுடைய மொஹமட் தாரிக் மன்சூர் உள்ளிட்ட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வேறுபட்ட விளக்கமொன்றை முன்வைத்துள்ளனர்.

வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகவும், இது திட்டமிடப்பட்ட தாக்குதல் அல்ல என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான உண்மை நிலையைத் தெளிவுபடுத்துவதற்காக சந்தேகநபர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஈரானியத் தூதுவரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த மேலதிக நீதவான், கைது செய்யப்பட்ட நால்வரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம், அரச பகுப்பாய்வாளர் அறிக்கை உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களையும் இம்மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவத்தின் உண்மையான பின்னணி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!
செய்திகள்

பிணையில் விடுதலையானார் நாமல் ராஜபக்ஷ!

November 3, 2026
1983 கருப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் விசேட நாடாளுமன்றக் குழு! பாராளுமன்றத்தில் புதிய யோசனை சமர்ப்பிப்பு!
செய்திகள்

1983 கருப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் விசேட நாடாளுமன்றக் குழு! பாராளுமன்றத்தில் புதிய யோசனை சமர்ப்பிப்பு!

November 3, 2026
அக்குரஸ்ஸ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்!
செய்திகள்

அக்குரஸ்ஸ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்!

November 3, 2026
ஜனாதிபதிக்கு சூனியம் வைத்ததாகக் கூறப்படும் பிக்குகளுக்கு சிக்கல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
செய்திகள்

ஜனாதிபதிக்கு சூனியம் வைத்ததாகக் கூறப்படும் பிக்குகளுக்கு சிக்கல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

November 3, 2026
கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

November 3, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்!; தென்னே ஞானானந்த தேரர் வலியுறுத்தல்
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்!; தென்னே ஞானானந்த தேரர் வலியுறுத்தல்

November 3, 2026
Next Post
1983 கருப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் விசேட நாடாளுமன்றக் குழு! பாராளுமன்றத்தில் புதிய யோசனை சமர்ப்பிப்பு!

1983 கருப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் விசேட நாடாளுமன்றக் குழு! பாராளுமன்றத்தில் புதிய யோசனை சமர்ப்பிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு