மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகருக்கான போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பொருத்துவதற்கான அங்குரார்ப்ன நிகழ்வு நேற்று (13)சனிக்கிழமை நடைபெற்றது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துள குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நீண்டகாலமாக மக்கள் விடுத்துவந்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரினால் இந்த திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள்,அமைச்சு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர்,
நாங்களும் எங்களுடைய கௌரவ அமைச்சர் பிள்ளையான் அவர்களும் இணைந்து பாராளுமன்றத்தில் அதிகமான வாக்குகளால் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களை நாங்கள் ஜனாதியாக தேர்வு செய்தோம்.
எங்களுடைய நாடு மிகவும் பொருளாதார பின்னடைவில் இருந்து பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த காலகட்டத்தில் அதிலிருந்து மீண்டதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
ஐந்து தடவை இந்த நாட்டினுடைய பிரதமராகவும், அரசியல் ரீதியாக பல்வேறு பதவிகளை வகித்த அனுபவங்களை கொண்ட ரணில் விக்கிரமசிங்கவினால் தான் ஐ.எம்.எப் ஊடாக ஒப்பந்தங்களை செய்து, இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தது.
முன்னர் எமது நாடு பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்த முடியாமையினாலேயே, நாங்கள் மீண்டும் கடன் பட்டு எங்களுடைய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு முடியாமல் போனமைக்கான காரணமாகும்.
தற்போது எமது நாட்டிற்கு பலதரப்பட்ட கடன் உதவிகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.
அக்காலத்தில் நடத்தி நடத்தி முடிக்கப்படாமல் இருந்து திட்டங்களை நாங்கள் தற்பொழுது நடத்தி முடிப்பதற்கான நிதிகள் எங்களிடம் கிடைக்க பெற்றுள்ளது. அத்தகைய தன்மையில் கௌரவ பிள்ளையானவர்கள் ஜனாதிபதியோடு இணைந்து அவருக்கு ஆதரவு நல்கி கிழக்கு மாகாணத்தில் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவர முடியுமாக இருக்கின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கி,உலக வங்கி , சவுதிஅரேபியா போன்றவற்றிலிருந்து கிடைக்கின்ற கடன் மூலம் மேலும் இந்த கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடையும்.
களுவாஞ்சிகுடி பிரதேசம் உட்பட பட்டிருப்பு தொகுதியில் அபிவிருத்தி செய்யப்படும் இந்த வீதி சமிக்ஞை விளக்கானது இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பொருத்தப்படும்.
கௌரவ ரணியில் விக்கிரமசிங்க அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவும் வழங்கும் முகமாக பிள்ளையானவர்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.
எனவே எதிர்வரும் காலங்களிலும் உங்களுடைய மாவட்டமானது அபிவிருத்தியடைய வேண்டுமாக இருந்தால் பிள்ளையானுக்கு உங்களுடைய ஆதரவை வழங்குவதனூடாக இப்பிரதேசம் முழுமையான ஒரு அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக மாற்றியமைக்க முடியும் என தெரிவித்தார்.