Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உணவு நஞ்சாகியதில் இளம் தாய் பலி; மட்டு மாங்காடு பிரதேசத்தில் சம்பவம்!

பேத்தை மீனை உட்கொண்ட மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – மாங்காடு கிராமத்தில் பேத்தை நச்சு மீனை உண்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மீனை சமைத்து உட்கொண்டத்தில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வியாழக்கிழமை (08) கடல் மீனினமான மாங்காடு கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய பேத்தை மீன்களை உட்கொள்ள கூடாத மீனினம் என்பதைத் அறிந்து மீனவர்கள் அதனை எடுத்து வீசியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு சென்ற ஒரு குடும்பத்தினர் மீனவர்கள் வீசிய மீன்களை பொறுக்கி எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது இது சமைப்பதற்கு உகந்த மீன் இல்லை அதனை எடுக்க வேண்டாம், என மீனவர்கள் எச்சரித்தையும் பொருட்படுத்தாத அவர்கள் பேத்தை மீனை சமைத்து உண்டுள்ளனர்.

இதனையடுத்து அன்றைய தினம் மாலை மீனை உண்ட 4 பேரும் திடீர் சுகயீனமுற்ற நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 27 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார். எனினும் மேலும் மூவர் அதே வைத்தியிசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுககிழமை (11) இரவு இவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய யூலியாமலர் எனும் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் களுவாஞ்சிகுடி பகுதி பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேசமயம் மீனை உண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய பெண்ணும், மற்றும் மூன்றரை வயதுடைய ஆண் பிள்ளையும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில் பெண்கள் இருவரின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
மட்டு செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

August 4, 2026
‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்
அரசியல்

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

August 4, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
Next Post
கதிர்காம யாத்திரைக்கு செல்ல அனுமதிக்காததால் இளைஞன் தற்கொலை; மட்டக்களப்பு கல்லடியில் சோகம்!

கதிர்காம யாத்திரைக்கு செல்ல அனுமதிக்காததால் இளைஞன் தற்கொலை; மட்டக்களப்பு கல்லடியில் சோகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு