ஸ்ரீலங்கா ரெலிகோம் நிறுவனத்தின் அரசாங்கத்திடமுள்ள 49.5 வீத பங்குகளை விற்பனை செய்வது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா கருத்து வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா ரெலிகோம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்த வேண்டாம் எனவும் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் இதுதொடர்பான குழு தீர்மானம் எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
ஆனால் இந்த தீர்மானத்துக்கு அரசாங்கம் இணங்கவில்லை என்பதையும் அறிய முடிகிறது. இந்த தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவிக்கவில்லையாயின், ஏன் அரசாங்கம் குழுவை நியமித்தது?
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே துறைசார் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது. இந்த யோசனை நிறைவேற்றப்படவில்லை எனில், குழுவை நியமித்தமைக்கான எவ்வித பலனும் இல்லை.
இதனூடாக நாடாளுமன்றத்தின் அதிகாரம் இழிவுபடுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.