களுத்துறை கடற்கரையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுங்கத் திணைக்கள நிர்வாக அதிகாரி ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளானவர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இவர் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை களுத்துறை கடற்கரையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் இவரை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.