Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தியது ரணில்; நாமல் குற்றச்சாட்டு!

அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தியது ரணில்; நாமல் குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புக்கள்,என பல அரசியல் கட்சிகளையும் பிளவுபடுத்தியது ரணில் விக்ரமசிங்கதான் என நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியதன் ஊடாக பிளவடைந்தது. ரணில் விக்ரமசிங்கவிற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்கினோம்.

எமக்கு ஏற்புடையதற்ற செயற்பாடுகளை செய்தாலும், வார்த்தையில் கூட நாம் எதுவும் சொல்லவில்லை. எனினும், கட்சி என்ற விதத்தில், கட்சியை பிளவுபடுத்தியதே எமக்கு கிடைத்த ஆதரவாகும். அதனால், எதிர்காலத்தில் நாம் அரசியல் தீர்மானமொன்றை எடுப்போம்.

நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு உண்மையாகவே உதவி புரிந்தோம். அவர் மொட்டு கட்சிக்கு அவ்வாறு செய்யவில்லை. அவரது பழக்கத்திற்கு அதனை செய்தார்.

அவரை கொண்டு வரும் போது, நாம் அதனை அறிந்திருந்தோம். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, நல்லாட்சி அரசாங்கம், மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றையும் அவர் பிளவுபடுத்தினார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் நாம் இன்றும் கலந்துரையாடுகின்றோம். சரியான இடத்திற்கு வருவாரேயானால், அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவோம்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைவருடனும் கலந்துரையாடுவோம். அதன் பின்னர் இறுதி தீர்மானத்தை எடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
பொலிஸுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற முச்சக்கரவண்டி சாரதி கைது!

பொலிஸுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற முச்சக்கரவண்டி சாரதி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு