பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதன் ஆரம்ப நிகழ்வு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் போட்டிகளின் போதும் இடம்பெற்ற தவறுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்தவகையில் ஒரு நாட்டின் தேசிய கீதமொன்று தவறான முறையில் ஒலித்த சம்பவமான்றும் ஒலிம்பிக் போட்டிகளின் போது இடம்பெற்றுள்ளது.
இதற்கென போட்டி ஏற்பாட்டளர்கள் உரிய தரப்பினரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.
ஆடவருக்கான கூடைப்பந்தாட்ட போட்டியின் போது தென் சூடான் அணி பங்கேற்கும் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் தென் சூடானின் தேசிய கீதத்திற்கு பதிலாக சூடானின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனால் அங்கு கூடியிருந்த இரசிகர்கள் கூக்குரல் எழுப்பினர்.
இதனையடுத்து தேசிய கீதம் இசைப்பது நிறுத்தப்பட்டு, மீண்டும் தென் சூடானிற்குரிய தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.