2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக, வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது
அதன்படி ஒகஸ்ட் 5 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மூலம் விண்ணப்பிக்க இறுதி நாளான ஆகஸ்ட் 5 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருத்தல் வேண்டும்.
அன்றைய திகதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனையின்றி நிராகரிக்கப்படும் என, தேர்தல் ஆணைக்கு தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.