மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நேற்று முன்தினம் தினம் ( 29) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு விசேட களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வரும் எனது நிதியினை இடைநிறுத்தகோரி மக்களுக்காக குரல் கொடுத்து மக்களின் பிரச்சனைகளைகளை பாராளுமன்ற ரீதியில் கொண்டு செல்லும் எனக்கு இவ்வாறானதொரு அநீதி இங்கு காணப்படும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களாலும் இழைக்கப்பட்டுகிறது.
எதனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் மக்களுக்காக குரல் கொடுப்பேன் எனவும் எனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக வெளிநாட்டு உளவுப்படை அண்மையில் தகவல் வெளியிட்டு இருந்தது, அனைத்தையும் கடந்து மக்கள் என்னோடு இருக்கிறார்கள் எனவும் கருத்து தெரிவித்தார்.
அபிவிருத்தி எனும் போர்வையில் 30 வீத கொமிசனை பெற்று , வாக்கு வங்கிகளை வைத்து அபிவிருத்தி செய்யும் திட்டமே இங்கு காணப்படுகிறது. நாம் அவ்வாறு வாக்கு வங்கிகளை வைத்து நாம் அபிவிருத்தி பணிகளையோ, எந்த ஒரு திட்டங்களையோ செய்ய வில்லை , மக்களுக்காக மக்களுக்கே எமது பணிகள் எப்போதும் தொடரும் எனவும் கருத்து தெரிவித்தார்.
இதன் போது அங்கு காணப்படும் மக்களின் முக்கிய பிரச்சனைகளான காட்டு யானைப்பிரச்சினை , குடிநீர் பிரச்சினை, வீதி அபிவிருத்தி , என பல்வேறு பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை பெறலாம் எனவும் , அதற்கான முன்மொழிவுகளை தான் பாராளுமன்ற மன்றம் , மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கூறுவதாகவும் தெரிவித்தார்.