Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக தமிழர்களினை ஒருங்கிணைக்கும் வகையில் மட்டு நகரில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!

உலக தமிழர்களினை ஒருங்கிணைக்கும் வகையில் மட்டு நகரில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உலக தமிழர்களினை ஒருங்கிணைக்கும் வகையில் நேற்றுமுன் தினம் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு கோலாகலமாக ஆரம்பமானது.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை இணைந்து இந்த உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டினை நடாத்துகின்றது.

மட்டக்களப்பு அரசடியில் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதை தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரியங்களையும் மட்டக்களப்பின் தனித்துவ அடையாளங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான பண்பாட்டு ஊர்திகள் மற்றும் மாணவர்களின் பவணியானது ஆரம்பமானது.

குறித்த பவனியானது மட்டக்களப்பு நகர் ஊடாக வருகைதந்து மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நிகழ்வுகள் ஆரம்பமானது.

உலக தமிழர் கலை இலக்கிய கருத்தரங்கியல் தலைவர் முனைவர் க.சுபாஷினி தலைமையில் ஆரம்பமான இந்த கருத்தரங்கின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ சி.சரணவன்,கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வ.கனகசிங்கம்,எழுத்தாளர் சுவிஸ் நாட்டை சேர்ந்த கல்லாறு சதீஸ் உட்பட இலங்கை,தமிழ் நாடு மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து வருகைதந்த எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு தொடர்பான மலர் வெளியிடப்பட்டதுடன் மட்டக்களப்பு ஆய்வு நூலும் இதன்போது வெளியீடு செய்யப்பட்டது.அத்துடன் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டை குறிக்கும் வகையில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் முத்திரையொன்றும் இதன்போது வெளியீடுசெய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
யாழில் விபத்து; பெண்ணொருவர் பலி!

யாழில் விபத்து; பெண்ணொருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு