செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயம் குறித்து எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மீண்டும் AI குறித்து எச்சரித்துள்ளார். சிறிய விடயங்களில் கூட AI பொய் சொல்லும் என்று அவர் கூறுகிறார்.
மேலும் மஸ்க் தனது சமீபத்திய நேர்காணலில், “AI தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலைகொள்ள செய்கிறது. தற்போது சிறிய விடயங்களாக இருப்பவை நாளடைவில் பாரியதாக மாறும். மேலும் மக்கள் இதனை அதிகளவு பயன்படுத்த துவங்கும்போது இன்னும் அதிகளவு பொய் கூறும்.
கடந்த கால வரலாறுகளின் குழந்தை பிறப்பு குறைவதே நாகரீக வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இதில் இருந்து மனித இனம் மீண்டுவரவில்லை எனில், இதே நிலை மீண்டும் எழுவதை யாரும் தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறைந்து வரும் குழந்தை பிறப்பு எண்ணிக்கையும் தனக்கு கவலையை ஏற்படுத்துகிறது என்றும் மஸ்க் குறிப்பிட்டார்.