அமெரிக்காவைச் சேர்ந்த கணினி தயாரிப்பு நிறுவனமான டெல், அதன் விற்பனை பிரிவிலிருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஊடககங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், பணிநீக்கம் தொடர்பில் தனது நிறுவன ஊழியர்களுக்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளமையே குறித்த தீர்மானத்திற்கு காரணம் என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.